2023 ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் இறுதிப் போட்டி இன்று நடைபெறகிறது. இறுதிப்போட்டியில் இந்திய அணியும் அவுஸ்திரேலிய அணியும் மோதவுள்ளன. கடந்த அக்டோபர் 11ஆம் திகதி உலகக் கிண்ண தொடரின் லீக் போட்டிகள் ஆரம்பமாகின. ஒவ்வொரு அணியும், மற்ற அணியுடன் ஒரு போட்டியில் விளையாடின. அதன்படி புள்ளிகள் அடிப்படையில், முதல் நான்கு இடங்களை பிடித்த அணிகள் அரையிறுதியில் மோதின.
அரையிறுதியில் இந்தியா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. இதில் வெற்றி பெற்ற இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இன்று நடைபெறும் போட்டியில் மோதவுள்ளன.
இறுதிப் போட்டியையிட்டு பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஐ.சி.சி. மற்றும் பி.சி.சி.ஐ. இணைந்து ஏற்பாடுகளை செய்துள்ளன.
இந்திய விமானப்படையின் சாகசங்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. தேநீர் இடைவேளையின்போது இசைக் கச்சேரிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.