அம்பாறை, ஒலுவில் பிரதேசத்தில் நேற்று முன்தினம் (17) மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர். மருதமுனையிலிருந்து ஒலுவிலுக்கு இந்த இரு இளைஞர்கள் பயணித்த மோட்டார் சைக்கிளும் மட்டக்களப்பு நோக்கிப் பயணித்த இ.போ.ச. பஸ் வண்டியும் மோதி விபத்து சம்பவித்தது.
இதன்போது சம்பவ இடத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன், மற்றைய வர் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மருதமுனையைச் சேர்ந்த 19 வயதுடைய தமீம் அதான் மிப்ரித், ரிபாய் அமர் அவ்ஜ் ஆகியோரே உயிரிழந்தனர்.
மரண விசாரணையின் பின் சடலங்கள் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டு, மருதமுனை மஸ்ஜிதுல் கபீர் ஜும்மா பள்ளிவாசலில் தொழுகை நடத்தப்பட்டு, நேற்று (18) காலை மருதமுனை மையவாடியில் சடலங்கள் நல்லடக்கம் செய்யப்பட்டன.
பெரியநீலாவணை விசேட, திராய்க்கேணி தினகரன் நிருபர்கள்