247
எதிர்வரும் கிறிஸ்மஸ் பண்டிகைக் காலத்தில் கோழி இறைச்சி மற்றும் முட்டை விலைகள் மேலும் குறைவடையுமென, கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்தார்.
ஆயினும், வற் வரி அதிகரிப்பால் இறக்குமதி செய்யப்படும் கால்நடை தீவனத்தின் விலை அதிகரித்தால் இந்த நிலை மாறலாமெனவும், அவர் தெரிவித்தார்.
சிறு மற்றும் நடுத்தர உற்பத்தியாளர்கள் தொடர்ச்சியாக தமது உற்பத்திகளை சந்தைக்கு கொண்டு செல்வதால், முட்டையொன்று 35 ரூபா முதல் 40 ரூபாவரை விற்பனை செய்யப்படும் சாத்தியம் இருப்பதாகவும், அவர் மேலும் தெரிவித்தார்.