டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி, இலங்கையின் முன்னணி இணைப்பு வழங்குனர், Dialog Innovation Challenge க்கான தனது கூட்டாளர்களை பெருமிதத்துடன் அறிவித்தது. நாட்டை டிஜிட்டல் தொழில்நுட்பம் நோக்கி இட்டுச்செல்லும் வல்லமை படைத்த புத்தாக்கமான டிஜிட்டல் தீர்வுகளை வலுப்படுத்துவதே இந்த முன்னெடுப்பின் நோக்கமாகும்.
சமீபத்திய கூட்டாளர் உள்ளடக்கங்கள், பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை வளர்க்கும் இந்த தேசிய முயற்சியில் குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கிறது. தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிறுவனம் (ICTA) தேசிய தொழில்நுட்ப பங்காளராக பொறுப்பேற்று சவாலின் தொழில்நுட்ப அடித்தளத்திற்கு ஆதாரமாய் திகழ்கிறது. இலங்கை பொறியியலாளர்கள் நிறுவகம் (IESL), இலங்கை கண்டுபிடிப்பாளர்கள் ஆணைக்குழு (SLIC) மற்றும் தேசிய கண்டுபிடிப்பு முகவர் நிறுவனம் (NIA) ஆகியவை தொழில்நுட்ப சுற்றுச்சூழல் பங்குதாரர்களாக கைகோர்க்கின்றன. வர்த்தக அறிவு கூட்டாளர்களாக, இலங்கை வர்த்தக சம்மேளனம் (CCC), இலங்கை சந்தைப்படுத்தல் நிறுவகம் (SLIM), மற்றும் இலங்கை டிஜிட்டல் சந்தைப்படுத்தல் சங்கம் (DMASL) ஆகியவை இந்த முன்னெடுப்புக்கு இணையற்ற தொழிற்துறை அறிவை அளிக்கின்றன.
தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிறுவனத்தின் தலைவர் பேராசிரியர் மலிக் ரணசிங்க இந்த கூட்டாண்மை குறித்து பேசுகையில், “ICTA சார்பாக, Innovation Challenge இல் Dialog உடன் பங்காளியாக கைகோர்ப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.” என்றார்.