2023 இல், NDB இன் இஸ்லாமிய வங்கிப் பிரிவு (IBU) ஒரு குறிப்பிடத்தக்க சாதனையைக் கொண்டாடியது,கோழிப்பண்ணை தொழிலில் முன்னணியில் இருக்கக்கூடிய ஒருவருக்கு குறைவடையும் முஷாரகா வசதியை கட்டமைத்தமைக்கு, 2022 ஆம் ஆண்டின் சிறந்த ஒப்பந்தத்திற்கான தங்க விருதை வென்றது. வருடாந்த IFFSA (தெற்காசியாவின் இஸ்லாமிய நிதி மன்றம்) நிகழ்வில் இந்த மதிப்புமிக்க அங்கீகாரம் வழங்கப்பட்டது.
இது இஸ்லாமிய வங்கி நடைமுறைகளில் சிறந்து விளங்குவதற்கான NDBயின் அர்ப்பணிப்பு மற்றும் புதுமையான நிதி தீர்வுகளை உருவாக்கும் திறனை எடுத்துக்காட்டுகிறது.
NDB ஷரீக் இஸ்லாமிய வங்கிப் பிரிவின் குறைவடையும் முஷாரகா வசதியானது தனிநபர்கள், சிறு நடுத்தர நிறுவனங்கள் மற்றும் பெரு நிறுவனங்களுக்கு விரிவடைகிறது. வீட்டுவசதி, நீர் மின் உற்பத்தி திட்டங்கள், கோழி வளர்ப்பு, சூரிய ஒளி தொழில் முயற்சிகள் மற்றும் உற்பத்தி போன்ற நோக்கங்களுக்காக வழங்கப்படுகிறது.
கூடுதலாக, NDB/IBU இறக்குமதியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்களுக்கு அவர்களின் நடைமுறை மூலதனத் தேவைகளுக்கு இஸ்லாமிய வங்கி வசதிகள் மூலம் உதவுவதுடன் அவர்களின் உள்ளூர் வர்த்தகம், இறக்குமதி நிதித் தேவைகளையும் நிவர்த்தி செய்கிறது. விருது பெற்ற குறைவடையும் முஷாரகா வசதியைத் தொடங்கி செயல்படுத்திய தனித்துவமான குழு உறுப்பினர்களை அங்கீகரிப்பது முக்கியம்.