சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்க முகவரகம் (USAID) மற்றும் இலங்கை சுற்றுலா அபிவிருத்து அதிகாரசபை (SLTDA) என்பன இணைந்து அக்டோபர் 24ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலியில் நடத்திய நிலையான சுற்றுலா கற்றல் கண்காட்சியை சுற்றுலாத் துறையில் உள்ள சிறு வணிக ஏற்பாட்டாளர்கள் பாராட்டியுள்ளனர். “இது ஒரு சிறந்த முன்முயற்சி மற்றும் சிறந்த திட்டமாகும், இது பரந்த அளவிலான தலைப்புகளில் எங்கள் அறிவை மேம்படுத்த உதவியது” என்று சிறிய ஹோட்டல் சொந்தக்காரரான பங்கேற்பாளர் கூறினார். “நாங்கள் சுற்றுலாத் துறையில் ஒப்பீட்டளவில் புதிதாக நுழைந்தவர்கள், மேலும் எங்கள் ஹோட்டல் அறைகள் எப்போதும் நிரம்பியே இருப்பதற்கு செல்வாக்குச் செலுத்தும் பல அம்சங்கள் உள்ளன என்பதை நான் இன்று உணர்ந்தேன். இது மிகவும் சிறந்த அனுபவமாக இருந்தது,” என்று அவர் மேலும் கூறினார்.
இந்நிகழ்வு 100க்கும் மேற்பட்ட சிறு வணிகங்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய பங்குதாரர்களை ஈர்த்திருந்தது மற்றும் நாடு முழுவதும் நடைபெறும் இதே போன்ற நிகழ்வுகளில் இது இரண்டாவது நிகழ்வாகும்.
முதல் நிகழ்வு கொழும்பில் செப்டம்பர் மாதம் நடைபெற்றது.
தற்போதைய டிஜிட்டல் மார்க்கெட்டிங், பயணப் போக்குகள் மற்றும் தங்கள் அன்றாட நடவடிக்கைகளில் நிலைத்தன்மையை எவ்வாறு இணைப்பது என்பதைப் பற்றி பங்கேற்பாளர்கள் கற்றுக்கொண்டனர்.