Sun Siyam Resorts இன் கீழ் காணப்படும் புட்டிக் ஹோட்டல் தொடரின் பெருமைக்குரிய அங்கமாக அமைந்துள்ள இலங்கையின் Sun Siyam பாசிக்குடா, 2023 நவம்பர் 17ஆம் திகதி முதல் தனது செயற்பாடுகளை மீள ஆரம்பித்துள்ளதாக அறிவித்துள்ளது. விருந்தினர்களுக்கு நவீன சொகுசான அனுபவங்களை பெற்றுக் கொடுக்கும் வகையில் நவீன மயமாக்கலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த நிலையில், சொகுசான அனுபவத்தை வழங்குவதுடன், இலங்கையின் கலாசார பெறுமதிகளை உணர்த்தும் வகையிலும் அமைந்திருக்கும்.
Sun Siyam பாசிக்குடாவின் பொது முகாமையாளர் அர்ஷத் ரிஃபாய், ஹோட்டல் பொது மக்களுக்காக மீளத் திறக்கப்பட்டுள்ளமை தொடர்பில் தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருந்தார். உள்நாட்டினருக்கு ஆதரவளித்து வாய்ப்பளிப்பதற்கான தமது உறுதியான அர்ப்பணிப்பு தொடர்பில் அவர் தெரிவித்திருந்ததுடன், குறிப்பாக பலகைசார் மரத்தளபாட செயற்பாடுகளில் உள்ளூர் சமூகத்தாரின் ஆதரவைப் பெற்றிருந்தமை தொடர்பில் குறிப்பிட்டிருந்தார். உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட மற்றும் உள்நாட்டிலிருந்து பெறப்பட்ட தயாரிப்புகளினூடாக ஹோட்டலின் நவீனமயமாக்கல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டிருந்ததாகவும், உள்நாட்டு கலைஞர்கள் மற்றும் சமூகத்தாருடன் இணைந்து தளபாடங்கள், செடிவிளக்குகள் (chandeliers) மற்றும் மூட்டுவேலைப்பாடுகள் (joinery) போன்றவற்றை முன்னெடுத்திருந்ததாகவும் அர்ஷத் குறிப்பிட்டார். இந்த ஹோட்டலில் பெருமளவு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், வர்ண அமைப்புகள் முதல் சாதனங்கள் மற்றும் பொருத்திகள் போன்றன வரையில் அனைத்து அம்சங்கள் மாற்றப்பட்டிருந்த போதிலும், ஹோட்டலின் அசல் கட்டமைப்பில் எவ்விதமான மாற்றங்களும் ஏற்படுத்தப்படவில்லை.