அடைக்கலம் தேடி
வந்த வந்தேறிகள்…
நாசிச கொடூரங்கள் வெளியாகி
அகதியான குடியேறிகள்…
வசித்து கொண்ட இடத்தை
வதிவிடமாக்கி,
முழுதாக்க வேண்டுமென
வளைத்து போட்டது
உதிரத்தின் சரிதம் சாட்சி
உலகின்
அறிந்திடும் காட்சி
பாவத்தின்
கட்டம் சூழ்ச்சி
இலுமினாட்டிகளின்
திட்டம் ஆட்சி
சியோனிசம் உரையாடி
உயிர்களை சூறையாடி
உணர்வுகளை திரைபாடி
நிலங்களில் வேலி போட்டு
கொண்டு
குலங்களில் தாலி தொட்டு
அறுக்கப்பட்டது
நிச்சயிக்கப்பட்ட நற்செய்தி
நபிகளாரின் வார்த்தைகளில்
ஷாம் தேச மக்களின்
புன்முறுவல் கூறிய முகங்களில்
கோழைத்தனமாக புறமுதுகை
காட்டவில்லை
நெஞ்சை துளைக்கட்டும்
உங்கள் தோட்டாக்கள்
அன்று கூறிய பதில்
காலத்திற்கும் எடுத்துரைக்கும்
வீரத்தை விதைத்து விட்டோம்
தலைமுறைகளின் வாழ்வில்
பசங்கற்ற பண்புகளில் பலஸ்தீனம்
பாகத்தின் எழும்புகள்
ஜெருஸலத்தில்
சிரியாவின் சின்னஞ்சிறு
சிட்டுகளின்
சிறகுகள் உடைக்கப்பட்டது
சினம் பெருக்கெடுப்பட்டது
தினங்கள் மாறிக்கொண்டது
காஸாவின் கண்ணீர் ஆகாயத்தில்
அகங்களை துளைத்தது காயத்தில்
ஐக்கியம் இன்றிய ஐயத்திற்கு
ஐ நா என்று கூறியது,
குறிகளினால் எய்த குறிக்கோள்
எங்கள் குரல்களினால்
அமைதி மலரட்டும்
இரத்தம் தோய்ந்த பூமி
347