Home » வரவு–செலவுத்திட்டம்-2024 பாராளுமன்றில் நாளை சமர்ப்பிப்பு

வரவு–செலவுத்திட்டம்-2024 பாராளுமன்றில் நாளை சமர்ப்பிப்பு

ஜனாதிபதியின் உரை நண்பகல் 12.00 மணிக்கு

by Damith Pushpika
November 12, 2023 8:10 am 0 comment

எதிர்வரும் 2024ஆம் நிதியாண்டுக்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (வரவு -செலவுத் திட்டம்) நாளை திங்கட்கிழமை (13) நண்பகல் 12.00 மணியளவில் நிதி அமைச்சர் எனும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இதனைத் தொடர்ந்து 2024ஆம் ஆண்டுக்கான வரவு -செலவுத்திட்ட உரையை நாளை நண்பகல் 12.00 மணிக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நிகழ்த்தவுள்ளார்.

நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை (14) முதல் 21ஆம் திகதிவரை ஞாயிறு தினம் தவிர்ந்த, ஏனைய நாட்கள் ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் (வரவு – செலவுத் திட்டம்) இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதம் நடைபெறவுள்ளது.

வரவு -செலவுத்திட்ட இரண்டாம் மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு நவம்பர் 21ஆம் திகதி (செவ்வாய்க்கிழமை) மாலை 6.00 மணிக்கு நடைபெறவுள்ளது.

குழுநிலை விவாதம் நவம்பர் 22ஆம் திகதி (புதன்கிழமை) முதல் டிசம்பர் 13ஆம் திகதி (புதன்கிழமை) வரை ஞாயிறு தினம் தவிர்ந்த, 19 நாட்களுக்கு நடைபெறவுள்ளது.

இதற்கமைய 2024ஆம் நிதியாண்டுக்கான வரவு -செலவுத்திட்ட மூன்றாம் மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு டிசம்பர் 13ஆம் திகதி (புதன்கிழமை) மாலை 6.00 மணிக்கு நடைபெறவுள்ளது.

வரவு – செலவுத்திட்ட விவாதத்தின் போது, ஒவ்வொரு நாளும் முற்பகல் 9.30 மணி முதல் மாலை 6.00 மணிவரை விவாதம் நடைபெறவுள்ளது. வாக்கெடுப்பு நடைபெறும் நாட்கள் தவிர்ந்த ஏனைய நாட்களில் மாலை 6.00 மணி முதல் மாலை 6.30 மணிவரை சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான விவாதம் நடைபெறுமென்பது குறிப்பிடத்தக்கது.

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

editor.vm@lakehouse.lk
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
77 770 5980
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division