நாட்டிலுள்ள அனைத்து தமிழ்மொழி மூலமான பாடசாலைகளுக்கு நாளை திங்கட்கிழமை (13) விசேட விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
தீபாவளிப் பண்டிகை இன்று ஞாயிற்றுக்கிழமை (12) என்பதால், இவ்வாறு திங்கட்கிழமை விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும், கல்வி அமைச்சு தெரிவித்தது.
திங்களன்று வழங்கப்படும் இந்த விடுமுறைக்கு பதிலாக எதிர்வரும் 18ஆம் திகதி (சனிக்கிழமை) அப்பாடசாலைகளில் கற்றல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுமெனவும், கல்வி அமைச்சு தெரிவித்தது. முன்னதாக மத்திய மாகாணத்திலுள்ள அனைத்து தமிழ்மொழி மூலமான பாடசாலைகளுக்கும் 13ஆம் திகதி விசேட விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து, ஊவா மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலுள்ள அனைத்து தமிழ்மொழி மூலமான பாடசாலைகளுக்கு 13ஆம் திகதி விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.
ஆகையால், நாட்டிலுள்ள அனைத்து தமிழ்மொழி மூலமான பாடசாலைகளுக்கும் 13ஆம் திகதி விடுமுறை வழங்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.