சர்வதேச சைகை மொழி தினம் 2023 சமூக சேவைகள் திணைக்களத்தினால் (DSS) பத்திரமுல்ல செத்சிறிபாயவில் கொண்டாடப்பட்டது, இதில் செவிப்புலன் அற்றோர் சமூகத்தின் பிரதிநிதிகள், அரசாங்க அதிகாரிகள், அனுசரணையாளர்கள், நலன் விரும்பிகள் மற்றும் விருந்தினர்கள் உட்பட 250க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் கலந்து கொண்டனர். DSS என்பது நாட்டின் செவிப்புலன் அற்றோர் சமூகத்திற்கு சைகை மொழி விளக்க சேவைகளை வழங்கும் முக்கிய அரச அமைப்பாகும்.
இலங்கையில் முதன்முறையாக, சமூக சேவைகள் திணைக்களம் (DSS) சைகை மொழி மொழிபெயர்ப்பாளர்களுக்கான ‘நெறிமுறைகள்’ புத்தகத்தை வைபவ ரீதியாக வெளியிட்டது. மேலும், இலங்கையில் முதன்முறையாக, செவிப்புலன் அற்ற குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்காக, DSS, அகில இலங்கை ரீதியில் ‘சைகை மொழி பேச்சுப் போட்டி’யை நடத்தியது.
NDB வங்கி, அவர்களின் நிறுவன நிலைத்தன்மை நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, ‘நெறிமுறைகள்’ புத்தகத்தை வெளியிடுவதற்கும், ‘சைகை மொழி பேச்சுப் போட்டியில்’ வெற்றி பெற்றவர்களுக்கான பரிசுகளுக்கும் அனுசரணை வழங்கியது. ஒவ்வொரு பிரிவிலும் வெற்றி பெற்றவர்கள் ‘நமது சுற்றுச்சூழலைப் பாதுகாத்தல்’ மற்றும் ‘சைகை மொழியின் முக்கியத்துவம்’ ஆகிய தலைப்புகளில் நிகழ்த்தி பேச்சு, மிகவும் சிறப்பாக அமைந்தது.