307
கைத்தொழில் திறமைக்கான “மத்திய ரக” ஜனாதிபதி தேசிய விருதினை (National Industry Excellence 2023 Award) சாய்ந்தமருதின் பிரபல தொழிலதிபரும் றியோ மார்கட்டிங் நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளரும், முன்னாள் கல்முனை மாநகரசபை உறுப்பினருமான நெய்னா முஹம்மட் றிஸ்மீர் பெற்றுக் கொண்டார்.
நிகழ்வு கொழும்பு தாமரை தடாகத்தில் கைத்தொழில் மற்றும் சுகாதார அமைச்சர் ரமேஸ் பத்திரன தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
( அஸ்ஹர் இப்றாஹிம்)