ரியல் எஸ்டேட் துறையில் முன்னோடியாக அமைந்துள்ள Prime Group, சொகுசு வாழிடம், நவீன வசதிகள் மற்றும் நம்பமுடியாதகொடுப்பனவுத் திட்டத்துடன் மிகச் சிறந்த முதலீட்டு வாய்ப்பை அறிமுகம் செய்துள்ளது.
நிறுவனத்தின் 27 அடுக்கு சொகுசு அபிவிருத்தி நிர்மாணத்திட்டத்தை கொழும்பின் எல்லைப் பகுதியில் நிர்மாணிக்கின்றது. புரட்சிகரமான கொடுப்பனவுக் கட்டமைப்பு இந்த திட்டத்தின் சிறப்பம்சமாக அமைந்துள்ளது. திட்டத்தின் பிரகாரம், ஆரம்பிக்கையில் வீட்டுக் கொள்வனவாளர் ஒருவர், 10% ஒதுக்கீட்டு கட்டணத்தை செலுத்த வேண்டும் என்பதுடன், ஆரம்பக் கொடுப்பனவை மேற்கொள்ள வேண்டிய தேவை இல்லை. 40 மாதங்களுக்கு 1% எனும் தவணை முறையில் தொகையை செலுத்த முடிவதுடன், எஞ்சியிருக்கும் 50% தொகையை, திட்டம் பூர்த்தி செய்யப்பட்டு கையளிக்கப்படுகையில் செலுத்தலாம். உரிமையாளர்களுக்கு ஆகக் குறைந்த மூலதன வருமானமாக 100% உறுதியளிக்கப்படுகின்றது.
கவர்ச்சிகரமான அறிமுக விலைகளில், அதிக இடவசதிகளுடன் இரண்டு மற்றும் மூன்று படுக்கையறைகளைக் கொண்ட குடியிருப்புகளுடனான இந்த முதலீட்டு வாய்ப்பு, முதலீட்டு வருமானத்தை பெற்றுக் கொடுக்கும் வகையிலும், பணியாற்றும் நிபுணர்களுக்கு பெருமளவு தொகையை ஒரே தடவையில் செலுத்த வேண்டிய தேவையை ஏற்படுத்தாமல், நெகிழ்ச்சித் தன்மையை வழங்குவதாக அமைந்துள்ளது. அவர்களுக்கு வங்கிக் கடனை பெற்றுக் கொள்வதற்கான தேவையும் எழாமல் இருக்கும்.