475
வெறுமையாய்
நிலத்தினை
வைக்காதீர்கள்
வேளாண்மை
அதனைச்
செய்திடுங்கள்.
பொறுமையாய்
அதனைப் பேணுங்கள்
பொற்கால மொன்று
பிறந்திடுமே.
வறுமையு
மெமைவிட்டுப்
போயிடுமே
வளமாக நம்நாடும்
வளர்ந்திடுமே.
அறுசுவை
உணவினை
உண்டிடலாம்
அகமிக மகிழ்ந்தே
வாழ்ந்திடலாம்.