பெற்றோர் பேச்சைக் கேட்காதல்
பிழையா சரியா பார்க்காதல்
கற்றோர் வழிநின் றொழுகாதல்
கற்கச் சொன்னால் பிடிக்காதல்
உற்றார் உறவை மதிக்காதல்
உயரும் எண்ணம் வளர்க்காதல்
முற்றும் திருந்த நினைக்காதல்
முடிவாய் எதையும் ஏற்காதல்
கூடா நண்பர் தவிர்க்காதல்
குடியும் புகையும் மறக்காதல்
ஆடா திருக்க ஆகாதல்
அவமா னத்தை துடைக்காதல்
காடாம் தாடி மழிக்காதல்
கவனக் குறைவை தடுக்காதல்
தேடாத் தீமை வெறுக்காதல்
திமிராய்த் திரிய மறுக்காதல்
நகத்தைக் கூட நறுக்காதல்
நாளைக் கென்று ஒதுக்காதல்
முகநூல் மூடி வைக்காதல்
முடியை அளவாய் குறைக்காதல்
அகந்தை தன்னை நீக்காதல்
அழுக்குத் துணியைத் துவைக்காதல்
உகந்த தெதையும் ஏற்காதல்
ஒவ்வொரு நாளும் ஒருகாதல்
வீட்டுச் சமையல் பிடிக்காதல்
வெளியில் உண்ண மறக்காதல்
நாட்டு நடப்பைப் பார்க்காதல்
நல்லவர் பேச்சை எடுக்காதல்
கூட்டா ளிமாரைக் குறைக்காதல்
குடும்பத் தாரை நினைக்காதல்
ஏட்டை எடுத்துப் படிக்காதல்
எதற்கும் முயற்சி எடுக்காதல்
இல்லாதார் கண்டு இரங்காதல்
இருகண்ணால் கூடப் பார்க்காதல்
பொல்லாதார் கண்டு ஒதுங்காதல்
புரியாத தறிய விரும்பாதல்
உல்லாசப் பயணம் தவிர்க்காதல்
உடும்பெனப் பிடியை மறக்காதல்
எல்லாமே கொண்ட இக்கால
இளசுகள் கொள்ளும் இடர்காதல்
காதல்
444
previous post