கெட்டதை நீயும்
தூக்கியே எறிந்திடு
கேட்டதை நன்றாய்
அலசியே அறிந்திடு
தொட்டதை முடிக்கவே
தேனீயாய் விரைந்திடு
விட்டதைத் தொடர்ந் தே
வீரியத்தில் சிறந்திடு
போதையைத் தொடாது
காத்திடு மனிதம்
பாதையை சரியாக்கிட
நிறைந்திடும் புனிதம்
பேதையை மதித்திட
துலங்கிடும் உள்ளம்
வதையை நிறுத்திடு
உனக்கது நல்லம்
வறுமையை விரட்டிட
இன்றே புறப்படு
பொறுமைக்குள் நீயும்
தயங்காது சிறைப்படு
வெறுமையை விலக்கி
சேர்ந்திடு உறவோடு
நிறைவை அழகாக்கு
எதிர்காலம் உன்னோடு
அனாதைகளை ஆதரிக்க
மறந்திடாதே நீயும்
விதவைகளை மதித்தே
நடந்திடு நாளும்
விதையாய் விழுந்தே
விருட்சமாய் மீளும்
நிறைவாய் அன்பும்
உன்னை ஆளும்
கண்ணீர் வடித்தே
தோல்வியில் துவளாதே
உன்னைச் செதுக்கிடு
நம்பிக்கை உளியாலே
விண்ணையும் தொடலாம்
முயற்சி கொண்டாலே
மண்ணையும் வெல்லலாம்
சோர்வைக் களைந்தாலே
உயரம் தொடவே
இலக்கை நாடிடு
துயரம் களைந்தே
இன்பத்தில் கூடிடு
புலரும் பொழுதில்
நன்மையைத் தேடிடு
நாளைய சமூகம்
உன்னைப் போற்றும்
நாளைய சமூகம்..!
497
previous post