452
பலஸ்தீனியர்களின்
கைகளிலும்
கால்களிலும்
பெயர்கள்
எழுதப்படுகின்றன.
ஏன்?
மரணம் நிச்சயம்.
கூம்புக் கூர்கள்
துளைக்கும்.
அங்கங்கள்
உருக்குலையலாம்.
கருகிய
கரித்துண்டாகலாம்.
தலை பறந்து
முண்டமாகலாம்.
அடையாளம் காணத்தான்
பெயர்கள்
எழுதப்படுகின்றன.
வல்லரசுகளின்
தாக்குதலில்
மழலை மொழி
மல்லிகைகள்
செவ்வரத்தம் பூக்களே!
ஆறடிகளுக்கே
அரையடி
நிச்சயம் இல்லை.
இரண்டடிகளுக்கு
இரண்டு
இஞ்சிகள் கிடைப்பது
பாக்கியமே!
குழந்தைகளுக்கு
பெயர்
எழுதவும்
எழுதப்படவும்
மரண வெக்கையில்
மன உறுதியின்
வலிமையின்
கம்பீரமே!