463
வலியே வலியாகும் வார்த்தை
வழிதேடும் வாழ்க்கை
அழியாத நினைவாய்
கலிகாலமாகி கரைகின்ற
கண்களின் நீரை
நிலம் தேடிச் செல்லும்
இது பிரியாத பாசம்
நானான நீயும்
நீயான நானும்
நிலமெந்தன் உறவு
உயிரான கனவு
பிறந்திங்கு தவழ்ந்தேன்.
வளர்ந்திங்கு நிமிர்ந்தேன்
தாய் தந்தை தொடராய்
உடன் பிறந்தோறும்
பிறந்த பூமியில்
அழித்தல் என்பது
அராஜகம்
இழந்திட்ட உயிர்கள்
இனி இழக்கின்ற உயிர்கள்
மண்தாங்கிக் கொள்ளும்
இது எங்களின் தேசம்.
எழுதப் படாத
விதிகளில் உங்களது சந்தோஷம்
நிலைப்பதில்லை
எங்களுக்கென எழுதப்பட்ட
நிலத்தில் கறை படிந்த
உங்கள் பாதங்கள்
படுமானால்
சுத்தப் படுத்துகின்ற
மண்ணாக இறுதிவரை
நாமிருப்போம்.