லிட்ரோ சமையல் எரிவாயு விலை நேற்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்பட்டதாக, அந்நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் தெரிவித்தார்.
12.5 கிலோகிராம் கொண்ட லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டரொன்றின் விலை 95 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 3,565 ரூபாவாகும். 05 கிலோகிராம் கொண்ட லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டரொன்றின் விலை 38 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 1,431 ரூபாவாகும். 2.3 கிலோகிராம் கொண்ட லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டரொன்றின் விலை 18 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 668 ரூபாவாகுமெனவும், லிட்ரோ சமையல் எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் மேலும் தெரிவித்தார்.