Home » சட்டவிரோத மின் இணைப்பால் 08 மாதங்களில் 08 கோடி ரூபா நட்டம்

சட்டவிரோத மின் இணைப்பால் 08 மாதங்களில் 08 கோடி ரூபா நட்டம்

இலங்கை மின்சாரசபை தெரிவிப்பு

by Damith Pushpika
November 5, 2023 8:20 am 0 comment

இந்த ஆண்டின் கடந்த 8 மாதங்களில் சட்டவிரோத மின்சாரம் இணைப்புக் காரணமாக சுமார் 8 கோடி ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக, இலங்கை மின்சாரசபை தெரிவித்தது.

சிலர் மின்மானியை மாற்றுதல் மற்றும் பல்வேறு சாதனங்களை பயன்படுத்தி சட்டவிரோதமாக மின்சாரத்தை பெற்றுக்கொண்டதாலேயே இந்த நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும், இலங்கை மின்சாரசபை தெரிவித்தது. இது தொடர்பாக இலங்கை மின்சாரசபை மேலும் தெரிவித்த போது, “இந்த ஆண்டு ஜனவரி மற்றும் ஓகஸ்ட் மாதங்களுக்கு இடையில் இவ்வாறான மின்சார கொள்முதலால் சபைக்கு 7 கோடியே 90 இலட்சத்து 74 ஆயிரத்து 857 ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளது.

கடந்த 8 மாதங்களில் மின்மானி மாற்றங்கள் தொடர்பாக 1,041 சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் இதனால் இலங்கை மின்சார சபைக்கு 7 கோடியே 64 இலட்சத்து 27 ஆயிரத்து 649 ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளது. இது மட்டுமின்றி, மின் கம்பிகளில் பல்வேறு சாதனங்கள் பொருத்தப்பட்டமை தொடர்பாக 81 சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் இதில் 26 இலட்சத்து 47 ஆயிரத்து 207 ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான நபர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர் அவர்களிடமிருந்து 36 இலட்சத்து 95 ஆயிரத்து 500 ரூபா அறவிடப்பட்டுள்ளது” என மேலும் தெரிவித்தது.

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

editor.vm@lakehouse.lk
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
77 770 5980
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division