இலங்கையில், மருந்து வகைகளின் சீரான விநியோகம் தொடர்பான அர்ப்பணிப்பினை மேலும் வலுவூட்டுகின்றது. Sunshine Holdings PLC இன் சகல விதமருந்து வகைகளின் முழு அளவிலான விநியோகப் பிரிவான Healthguard Distribution ஆனது அண்மையில் சிறந்த விநியோக நடைமுறைகளுக்கான (GDP) சான்றிதழினைத் தனதாக்கிக் கொண்டது.
Bureau Veritas India இனால் வழங்கப்பட்ட இம்மதிப்புமிக்க சான்றிதழானது Healthguard Distribution இன் சிறந்த இறக்குமதித் தரம், களஞ்சியப்படுத்துதல் மற்றும் விநியோக செயற்பாடுகள் தொடர்பான முகாமைத்துவக் கடப்பாட்டிற்குக் கிடைத்த உயரிய சான்றாகும்.
GDP சான்றிதழானது மருந்து வகைகளின் விநியோகச் சங்கிலி தொடர்பான விதிமுறை வழுவாத தரநிர்ணயத்தினை நிலைநாட்டுவதில் Healthguard Distrubution இன் அர்ப்பணிப்பினைக் குறிக்கின்றது.
Bureau Veritas India, ஆனது சர்வதேச அங்கீகாரம் பெற்ற சான்றிதழ்களை வழங்கும் ஓர் ஆணைக்குழுவாகும். இது வர்த்தகத் தொழில்துறையின் சிறந்த நடைமுறைகள் மற்றும் ஒழுங்குமுறை தொடர்பான தேவைகளுக்கு இணங்கிச் செல்வதனை உறுதி செய்வதற்காக Healthguard Distrbution இன் செயல்முறைகள், உள்கட்டமைப்பு மற்றும் நடைமுறைகள் தொடர்பாக மிகுந்த உன்னிப்பான மதிப்பீடுகளை மேற்கொண்டுள்ளது.
இச்சாதனையானது, Healthguard Distrbution ஆனது கையாளும் ஒவ்வொரு மருந்துப் பொருட்களின் பாதுகாப்பு, செயல்திறன் மற்றும் ஒருமைப்பாட்டிற்கான அர்ப்பணிப்பினை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றது. தர முகாமைத்துவமானது இந்நிறுவனத்தின் முக்கிய கடப்பாடாகக் கருதப்படுகின்றது.