கொழும்பு நகர மத்தியில் அமைந்துள்ள யுனிற்றி பிளாஸா கட்டடமானது இலங்கையின் அனைத்து தகவல் தொழில்நுட்பத் தீர்வுகளும் ஒரே கூரையின் கீழ்க் கிடைக்கக்கூடிய நிலையமாக மாறியுள்ளது. யூனிற்றி பிளாஸாவின் 51 சதவீத பங்குகளை 2020ஆம் ஆண்டில் கொள்வனவு செய்த Realty Investments PLC, ஆனது யூனிற்றி பிளாஸாவை புனரமைத்து அதற்கு புதியதொரு முகத்தைக் கொடுத்துள்ளது. அதனால் தற்போது யூனிற்றி பிளாஸாவானது இலங்கையின் தகவல் தொழில்நுட்ப கேந்திரநிலையமாக நிமிர்ந்து நிற்கின்றது.
Realty Investments PLC இன் நிறைவேற்று செயற்பாட்டு பணிப்பாளர் தர்ஷினி சர்வேஸ்வரனுடன், ஆர்ச்சி வோர்மன் மற்றும் ஹார்டி ஜமால்தீன் ஆகியோர் இம்முயற்சியில் பக்கபலமாக இருந்துள்ளனர்.