இலங்கையின் இலத்திரனியல் வணிக கட்டமைப்பில் புதிய மைல்கல் சாதனையை நிறுவும் வகையில், ஏசியன் ஹார்ட்வெயார் (Pte) Ltd, SLT டிஜிட்டல் சேர்விசஸ் (பிரைவட்) லிமிடெட் உடன் கைகோர்த்துள்ளது. இந்த பங்காண்மையினூடாக, ஹார்ட்வெயார் விற்பனைத்துறையில் ஏசியன் ஹார்ட்வெயார் (Pte) Ltd கொண்டுள்ள நிபுணத்துவமும், புத்தாக்கமான டிஜிட்டல் தீர்வுகளை வழங்குவதற்கான SLT டிஜிட்டல் சேர்விசஸ் கொண்டுள்ள தொழில்நுட்ப நிபுணத்துவமும் இணைக்கப்பட்டுள்ளது.
ஏசியன் ஹார்ட்வெயார் (Pte) Ltd இன் முகாமைத்துவ பணிப்பாளர் ஏ.ஆர்.எம். யஷீர் கருத்துத் தெரிவிக்கையில், “வியாபாரங்கள் இயங்கும் முறையில் தொழில்நுட்பம் செல்வாக்கு செலுத்தும் காலகட்டத்தில், இந்த கைகோர்ப்பினூடாக, எமது வாடிக்கையாளர்களுக்கு முன்னரை விட மேலும் சிறந்த மற்றும் சௌகரியமான சேவைகளை பெற்றுக் கொடுக்க வலுவூட்டுவதாக இருக்கும் என நம்புகின்றோம்.” என்றார்.
வியாபார வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்வதற்கு அவசியமான டிஜிட்டல் தீர்வுகளை தயாரித்து நடைமுறைப்படுத்துவதில் SLT டிஜிட்டல் சேர்விசஸ் பெருமளவு அனுபவத்தைக் கொண்டுள்ளது.
புத்தாக்கம் மற்றும் வாடிக்கையாளர் வெற்றிகரமான செயற்பாடுகள் போன்றவற்றுக்கான அவர்களின் அர்ப்பணிப்புகள், ஏசியன் ஹார்ட்வெயார் (Pte) Ltd இன் இலக்குகளுடன் மிகவும் பொருந்துவதாக அமைந்துள்ளதுடன், ஒப்பற்ற மற்றும் வாடிக்கையாளர்களை மையப்படுத்திய இலத்திரனியல் வணிக கட்டமைப்பை உருவாக்க ஏதுவாக அமையும்.