இலங்கையில் வேகமாக வளர்ந்து வரும் காப்புறுதி நிறுவனமான சணச லைஃப் இன்சூரன்ஸ் பீ.எல்.சி தனது புதிய கிளையை யாழ்ப்பாண நகரில் இல. 237, ஸ்ரான்லி வீதி எனும் முகவரியில் திறந்து வைத்துள்ளது.
நாட்டின் சம்பிரதாயங்களுக்கு முதலிடம் கொடுத்து இடம்பெற்ற இத் திறப்பு விழா நிகழ்வில் சணச குழுமத்தின் தலைவரான பி.கஜேந்திரா, பணிப்பாளர் எஸ்.எஸ்.மாறன் பிரதான நிறைவேற்று அதிகாரி, ஐவன் நிகலஸ் மற்றும் பிரதான வணிக அதிகாரி, கெனடி ஜே.மைகல், ஆகியோர் தலைமையில் நடைபெற்றதுடன் சணச லைஃப் இன்சூரன்சின் நிர்வாக இயக்குனர் குழுமம் மற்றும் உயர் மட்ட முகாமையாளர்கள் ஆகியோரும் இந்நிகழ்வில் பங்குபற்றினர்.
யாழ்ப்பாண கிளையை தெரிவு செய்யும்போது யாழ்ப்பாணத்தின் பாரம்பரிய முறைமைகள் பாதுகாக்கப்படும் வகையில் அனைத்து சமய நடவடிக்கைகளும் நிகழ்த்தப்பட்டதுடன், யாழ்ப்பாணத்தின் புராதன சம்பிரதாயங்களை பின்பற்றி கிளையின் நடவடிக்கைகளை செயற்படுத்தியமை இதன் மூலமாக தெளிவாகின்றது. அதிகளவான வர்த்தகங்கள், உயர் கல்வி நிலையங்கள், நிதி நிறுவனங்கள் என்பன அண்மைக்காலத்தில் யாழ்ப்பாணத்தில் நிர்மாணிக்கப்படுவதுடன் யாழ் நகர மக்களுக்கு மேலும் சிறந்த வசதிகளையும், இலகுவான முறையில் தமது காப்பீட்டு தேவைகளை பூர்த்தி செய்வதற்காகவும் நாடு முழுவதும் கிளைகளைக் கொண்டுள்ள எமது நிறுவனமானது, தனது இன்னும் ஒரு புதிய ஆரம்பமாக யாழ்ப்பாணக் கிளையை ஆரம்பித்துள்ளது.