நான் பேச மறந்த
ஞாபகங்கள்
என்னுள்
பல இருந்தாலும்
மண்ணுள்
புதைந்தவையாகத்தான்
உள்ளது.
சிற்பங்களாய்
உருவெடுத்துள்ளன
இந்த ஞாபங்கள்
நாள்தோறும்
உணர்வில்லாது
பயணிக்கின்றன இன்று.
பயணங்கள் தொடங்கி
பல நாட்களாகின
பாதைகளை புற்களும்
மறைத்துவிட்டது
கண்களை இருள்
முடக்கிவிட்டது என்ன
செய்வது என்று
தெரியாமல் தவிக்கிறேன்
நான் பேச
வந்த ஞாபகங்களுடன்.
தாகம் மறந்து
பல ஞாபகங்கள்
என்னை வாட்டுகின்றன
உலகத்தின்
நியதிதெரியாமல்.
சத்தமின்றி தூங்கியது
அந்தக் காலம்
பல ஓசையின்றி
தூங்காமல் இருப்பது
இந்த காலம்.
பிச்சை எடுப்பவனும்
கூட கௌரவமாய்
உடுக்கும் ஆடையிலும்
அழகு உண்டு
மானிடங்கள் உடுக்கும்
ஆடையில் மானமுமில்லை
என்பது இன்றைய
உண்மை.
நான் பேச மறந்த
ஞாபகங்கள் கூறி
நதிகளாய் போனதுதான்
மிச்சம் இந்த பேச்சுக்கள்
எப்போது பேசுவேன்
நான் பேச
மறந்த ஞாபகங்களை….??
நான் பேச மறந்த ஞாபகங்கள்
500
previous post