மனிதப் புனிதர்களாம்
மா நபிகள் பிறந்து மறைந்த
புனித பூமி அது.
புண்ணியங்கள் செய்து
அல்லாஹ்வின்
புகழ் சேர்க்கும் மண்ணும் அது..
இன்று……
காசாவின் கரைப்பகுதி
இரத்தக் கறை படிந்து இருக்கிறது…
கட்டட இடிபாடுக்குள்…
காசாவின் ஷஹீதுகள்…
உருக்குலைந்து கிடக்கிறது.
மின்மினிகளாய் வலம் வந்த…
சின்னஞ்சிறு பிஞ்சுகளும்.
சிதைந்து போன குற்றுயிராய்…
சிதறித்தான் போனது
கண்ணு ரெண்டும் ….
பொறுக்குதில்லையே …
இந்த கொடூர காட்சியைக் காண..
வலி வந்து கிழிக்கிறது.
நெஞ்சமெல்லாம் வலிக்கிறதே….
திருமறையின் வாசகங்கள்..
வாய் மணக்க ஓதிய…
வண்ண சிட்டுகள்….
சிதைவடைந்து சதைகளாய்…….
பாலஸ்தீன மண்ணில்.
நயவஞ்சக யூ…….தனின் ..
ஈனத் தோட்டாக்கள்…
ஈவிறக்கமின்றி பிஞ்சுகளின்…
நெஞ்சுகளை பிச்செறிந்து
செல்கிறது……
கருவறையில் கருவூலம்
காணாத சிசு கூட…..
கருக்கலைந்து……
கயவர்களின் அரக்க ரூபம்…
தெரிகிறதே.
காசாவின் மண்ணில் ….
வீழ்வது உயிர்கள் அல்ல
ஈமானிய விதைகள்…
புதைக்கப்படுவதெல்லாம் …
வெறும் உடல்களல்ல….
வீரத்தின் விருட்சங்கள்.
பயந்து ஓடும் கோழைகளல்ல…..
எம் பிஞ்சுகளும்.!
நெஞ்சுகளை தோட்டாக்கள்….
கிழித்தபோதும்…
அஞ்சவில்லை
அல்லாஹ்வைத்
தவிர….
எவனுக்காகவும்!
எதற்காகவும்….!
யுத்த சத்தமும் பிஞ்சுகளின் ரத்தமும்
560