514
சின்னஞ் சிறிய நம்நாட்டில்
சிதைந்து நாங்கள் வாழ்ந்திட்டால்
இன்னும் வீழ்ச்சி எமைச்சூழும்!
இனியும் பிரிவை வளர்ப்பதுவோ ?
வடக்கும் தெற்கும் நம்நாடே
வாழும் யாரும் சோதரரே
இடர்கள் எவர்க்கு வந்தாலும்
ஈழத் தாய்க்கு வேதனையே
இந்து பௌத்த சமயங்கள்
இஸ்லாம் கிறிஸ்தவ மனைத்துமே
எந்த வேளையு மெடுத்தோதும்
ஒற்றுமை என்ற மந்திரத்தை
சிங்கள மும்செந் தமிழ்மொழியும்
சங்கம மான நம்நாடு
எங்கும் இயற்கை வளம்மிகுந்த
உழைப் பாளர்கள் நிறைநாடு
ஒன்று பட்டே நாமுழைத்தால்
எல்லா வளமும் கைதூக்கும்
துன்பம் துயரம் தொல்லையெலாம்
தொலைந்தே நாடு வளர்ந்தோங்கும்.