610
அமெரிக்க முத்தமிழ் இலக்கியப் பேரவையும் உலக முத்தமிழ்க் கூட்டமைப்பும் இணைந்து நடத்தும் உலக முத்தமிழ் மாநாடும், அமெரிக்கா முத்தமிழ் இலக்கியப் பேரவைக் குழுமங்களின் இரண்டாம் ஆண்டு விழாவும் நேற்று 28ஆம் திகதி இறம்பொடை (நுவரெலியா) தொண்டமான் கலாசார மண்டபத்தில் ஆரம்பமாகியது.
நேற்றைய விழாவில் தினகரன் ஆசிரியர் பீடத்தைச் சேர்ந்த சிரேஷ்ட ஊடகவியலாளர் கே. ஈஸ்வரலிங்கம் கௌரவ கலாநிதி பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டார். இவருக்கான விருதினை ஐ.டி.எம் நிறுவனத்தின் ஸ்தாபகர் டாக்டர் விநாயகமூர்த்தி ஜனகன் மற்றும் முனைவர் சிவலிங்கம் சதீஷ்குமார் ஆகியோர் பிரமுகர்களுடன் இணைந்து வழங்கினர்.