கல்விப் பொதுத் தராதர சாதாரணதர மற்றும் உயர்தரப் பரீட்சை (O/L & A/L) சான்றிதழ்களின் இணையவழி (ஒன்லைன்) அங்கீகாரத்தை வெளிவிவகார அமைச்சின் தூதரக விவகாரப்பிரிவு அறிமுகப்படுத்துகின்றது.
2001ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்ட க.பொ.த. சாதாரணதரம் மற்றும் உயர்தரம் பரீட்சை சான்றிதழ்களுக்கு இணையவழி சேவையை அணுக முடியுமென்பதுடன், புதிய இணையவழி முறையின் கீழ் க.பொ.த. (சா/த) மற்றும் (உ/த) சான்றிதழ்களின் அங்கீகாரத்துக்காக தூதரக விவகாரப் பிரிவின் ஒன்லைன் தளத்தின் மூலம் தனிநபர்கள் விண்ணப்பிக்க முடியும்.
படிமுறை 1:- பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்துக்குச் சென்று க.பொ.த. O/L & A/L பரீட்சை சான்றிதழ்களுக்கான ஒன்லைன் விண்ணப்பத்தை இணைப்பின் மூலம் சமர்ப்பிக்கவும்: https://certificate.doenets.lk/certificate.
படிமுறை 2:- சான்றிதழ் உருவாக்கப்பட்ட பின்னர் விண்ணப்பதாரர்கள் இணைப்புடன் ஒவ்வொரு சான்றிதழுக்கும் தனிப்பட்ட உறுதிப்படுத்தல் எண்ணை SMS மூலம் பெறுவார்கள்.
படிமுறை 3:- SMS உறுதிப்படுத்தல் கிடைத்ததும், விண்ணப்பதாரர்கள் இந்த இணைப்பின் மூலம் ஆவணத்தின் அங்கீகாரத்துக்காக தூதரக விவகாரப் பிரிவைக் கோரலாம்: http://consular.mfa.gov.lk:90/
மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ளவும்: தொலைபேசி இலக்கம் 011-2338812 அல்லது email: authentication.consular@mfa.gov.lk.