நாட்டிலுள்ள 10,126 பாடசாலைகளும் நட்பு பாடசாலைகளாக மாற்றப்பட்டு, ஆங்கிலத்தில் கற்பித்தல் மேற்கொள்ளப்பட வேண்டுமென, எதிர்க்கட்சி தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
உந்துகொடை, அரபா பாடசாலையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
வங்குரோத்து நிலையிலுள்ள நாட்டில் இந்த தருணத்திலாவது உலகை வெல்லும் பிரஜைகளை உருவாக்கும் பயணத்தை ஆரம்பிக்க வேண்டுமெனவும், எதிர்க்கட்சி தலைவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, நட்பு நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு நான் அர்ப்பணிப்புடன் செயற்படுவதுடன், இதற்காக நாட்டின் கல்விமுறை நவீன தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட நட்பு ரீதியான கல்வி முறையாக இருக்க வேண்டுமெனத் தெரிவித்தார்.