இனவாதத்துக்கு தூபமிடும் வகையில் செயற்படும் அம்பிட்டிய சுமண தேரருக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் மாஅதிபரிடம் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் பொதுச் செயலாளரும் நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சருமான ஜீவன் தொண்டமான் வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன், இந்த விவகாரம் தொடர்பாக பொலிஸ் தலைமையகத்திலும் அமைச்சர் முறைப்பாடொன்றை முன்வைத்துள்ளார்.
இந்தத் தேரரின் கடந்தகால செயற்பாடுகள் இன மோதலை ஏற்படுத்தும் நோக்கில் அமைந்துள்ளதால், இது தொடர்பாக உரிய வகையில் விசாரணை நடத்தி, ஜனாதிபதிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சருக்கும் தனக்கும் அறிக்கை வழங்குமாறும், அமைச்சர் ஜீவன் தொண்டமான் கோரிக்கை விடுத்துள்ளார்.