எதிர்வரும் 2024ஆம் ஆண்டுக்கான ஹஜ் பயணம் மேற்கொள்ள எண்ணியுள்ளவர்கள், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ வலைத்தளத்துக்குச் சென்று அதிலுள்ள விண்ணப்பத்துக்கேற்ப தங்கள் பதிவை மேற்கொள்ள முடியுமென, அத்திணைக்களம் தெரிவித்தது. 2024ஆம் ஆண்டுக்கான ஹஜ் முகவர்களை தெரிவு செய்கின்ற நேர்முகத்தேர்வு எதிர்வரும் நவம்பர் 2ஆம், 3ஆம், 4ஆம் திகதிகளில் நடைபெறுவதற்கான ஏற்பாடுகளை முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மேற்கொண்டு வருகின்றது. கீழ் கொடுக்கப்பட்டுள்ள திணைக்களத்தின் உத்தியோகபூர்வ வலைத்தள முகவரியினூடாக மாத்திரம் தங்கள் பதிவை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
https://muslimaffairs.info/hajjapplications_24/create