பிரான்ஸ் மற்றும் இலங்கைக்கு இடையிலான இராஜதந்திர உறவுக்கான 75ஆவது வருட பூர்த்தியையிட்டு வெளிவிவகார அமைச்சில் விசேட நினைவு முத்திரையொன்று நேற்றுமுன்தினம் வெளியிடப்பட்டது.
இலங்கை மற்றும் பிரான்ஸின் யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளங்களான சிகிரியா மற்றும் மோன்ட் செயிண்ட் மைக்கேலை சித்தரிக்கும் இரண்டு 50 ரூபா முத்திரைகள் மற்றும் முதல் நாள் தபால் உறையும் அங்கு வெளியிடப்பட்டது. இதனுடன் இந்த முத்திரையின் பிரெஞ்சு பதிப்பும் இந்நிகழ்வில் வெளியிடப்பட்டது. விரைவில் இது பிரான்ஸிலும் வெளியிடப்படவுள்ளது. இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் சீன் பொன்சுவா பாக்டே, வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன, ஊடகத்துறை இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார, வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அருணி விஜேவர்தன, ஊடக அமைச்சின் செயலாளர் அனுஷ பெல்பிட்ட, தபால் மாஅதிபர் ருவன் சத்குமார உள்ளிட்டோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.