நாளைய எதிர்காலத் தலைவர்களாக அடையாளம் காணப்பட்ட நூற்று ஐம்பத்திரண்டு இளம் இலங்கையர்கள் செலிங்கோ லைஃப் நிறுவனத்திடமிருந்து 22 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான புலமைப் பரிசில்களைப் பெற்றனர். இவர்கள் நாட்டை கட்டியெழுப்ப உதவ வேண்டும் எனவும் இது அவர்களின் எதிர்காலக் கடமையாகும் எனவும் வலியுறுத்தப்பட்டது.
அதிகரித்து வரும் கல்விச் செலவுகள் மற்றும் வாழ்க்கைச் செலவு என பொருளாதார நெருக்கடியின் தாக்கங்களை உணர்ந்து செலிங்கோ லைஃப் ‘பிரணாம’ புலமைப்பரிசில்களின் பெறுமதியை தானாக முன்வந்து இரட்டிப்பாக்கியமை இந்த ஆண்டு விழாவின் குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றிய கொழும்புப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் எச்.டி. கருணாரத்ன, எதிர்கால சவால்களுக்கு முகங்கொடுக்கும் இன்றியமையாத கருவிகளான திறன் மேம்பாடு, மொழிப் புலமை, ICT கல்வியறிவு மற்றும் நிதி அறிவாற்றல் ஆகியவற்றின் முக்கியத்துவம் குறித்து கவனம் செலுத்தினார்.
மேலும் மாணவர்கள், அவர்களது பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆங்கிலம் மற்றும் தாய்மொழிக்கு கூடுதலாக ஒரு சர்வதேச மொழியின் மதிப்பை புரிந்து கொள்ள வேண்டும், ஸ்மார்ட்போன்களின் ‘ஸ்மார்ட் பாகத்தில்” மாஸ்டர்களாக இருக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.