இலங்கையின் முன்னணி காப்புறுதி சேவை வழங்குநரான யூனியன் அஷ்யூரன்ஸ், “இருதய தின படி சவால்” போட்டியை வெற்றிகரமாக முன்னெடுத்திருந்தது. இருதய சுகாதாரத்தை ஊக்குவிப்பதற்காக இந்தப் போட்டி முன்னெடுக்கப்பட்டிருந்தது. செப்டெம்பர் 29 ஆம் திகதி உலக இருதய தினத்தை முன்னிட்டு நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த போட்டியில், உடல்சார் செயற்பாடுகள் ஊக்குவிக்கப்பட்டிருந்தது மாத்திரமன்றி, இருதய சுகாதாரத்தின் முக்கியத்துவம் தொடர்பான விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டிருந்தது.
15 நாட்களுக்கு முன்னெடுக்கப்பட்ட இந்த போட்டியில் 600 க்கும் அதிகமான போட்டியாளர்கள் பங்கேற்றிருந்தனர். போட்டிக் காலப்பகுதியில், யூனியன் அஷ்யூரன்ஸ் Clicklife App ஐ பயன்படுத்தி அதிலுள்ள ‘Get Fit’ உள்ளம் சத்தினூடாக, தமது நடை படிகளின் எண்ணிக்கையை கணிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தனர். இந்த மேம்படுத்தப்பட்ட உள்ளம்சத்தில் உடல்சார் செயற்பாடுகளை கண்காணிப்பதற்கான பிரத்தியேகமான dashboard ஒன்றும் தினசரி உணவு உள்ளெடுப்பு அளவை கண்காணிப்பதற்கான கலோரி கணிப்பானும் காணப்படுகின்றது.
குறிப்பாக, இதில் AI-வலுவூட்டப்பட்ட உணவு படம் இனங்காணல் கட்டமைப்பு மற்றும் இனங்காணல் கட்டமைப்பு போன்றன காணப்படுவதால், பாவனையாளர்களுக்கு தமது உணவுகளில் காணப்படும் கலோரி அளவு பற்றி அறிந்து கொள்ள முடியும். Clicklife App ஊடாக பாவனையாளர்களுக்கு பிரத்தியேகமான உடற் தகைமையை பேணி, உடல் பருமன் குறைப்பு அல்லது பேணல் முன்னெடுக்கலாம். இதற்காக பரந்தளவில் பயன்படுத்தப்படும் Mifflin-St Jeor கணிப்பீடான Basal Metabolic Rate (BMR) முறைமை பின்பற்றப்படுகின்றது.