மொனராகலை SOS சிறுவர் கிராமத்தில் சிறுவர் தினத்தை கொண்டாடிய AkzoNobel மொனராகலை SOS சிறுவர் கிராமத்தைச் சேர்ந்த சிறுவர்களுக்கு நினைவிலிருக்கும் தினமாக அமைந்திருந்தது. இலங்கையில் டியுலக்ஸ் பெயின்ட் வகைகளின் உற்பத்தியாளரான AkzoNobel, சிறுவர் தினத்தை முன்னிட்டு மொனராகலை SOS சிறுவர் கிராமத்தில் களிப்பூட்டும் விளையாட்டுகள், விநோத அம்சங்கள் மற்றும் வர்ணந்தீட்டும் செயற்பாடுகள் போன்றவற்றை முன்னெடுத்திருந்தது.
இந்த ஆண்டு AkzoNobel இன் தன்னார்வ ஊழியர்கள் மொனராகலை SOS கிராமத்துக்கு விஜயம் செய்திருந்ததுடன், அங்கிருந்த சிறுவர்களுடன் இணைந்து, களிப்பூட்டும் அம்சங்கள் நிறைந்த செயற்பாடுகளில் ஈடுபட்டனர். சிறுவர்களுக்கு போட்டிகளில் பங்கேற்பதற்கான வாய்ப்புகள் வழங்கப்பட்டதுடன், ஊக்கமளிக்கும் மற்றும் ஆலோசனை வழங்கும் அமர்வுகளில் பங்கேற்கும் வாய்ப்பும் வழங்கப்பட்டது. மேலும், இசை மற்றும் களிப்பூட்டும் அம்சங்களினூடாக அவர்களுக்கு குதூகலத்தையும் வழங்கியிருந்தனர். ஒவ்வொரு சிறுவருக்கும் விசேட அன்பளிப்பும் வழங்கப்பட்டிருந்தது.
இரு ஸ்தாபனங்களுக்குமிடையே நீண்ட காலமாக நிலைத்திருக்கும் உறவுகளுக்கான பல எடுத்துக்காட்டுதல்களில் ஒன்றாக இந்த நிகழ்வு அமைந்துள்ளது. AkzoNobel இன் சர்வதேச Let’s Colour சமூக செயற்பாட்டின் அங்கமாக, 2019 ஆம் ஆண்டு பங்காண்மை ஏற்படுத்தப்பட்டிருந்தது.
Global YouthCan வலையமைப்பின் அங்கமாக திகழும் AkzoNobel, SOS சிறுவர் கிராமங்களுடன் இணைந்து, இளைஞர் தொழில் வாய்ப்பின்மையை இல்லாமல் செய்து, நேர்த்தியான தாக்கத்தை ஏற்படுத்துவதற்காக புனரமைப்பு மற்றும் கல்வியறிவூட்டல் போன்றவற்றை பயன்படுத்துகின்றது.