688
நிதியை வாங்கி
நீதியை விழுங்கி
பொய்மையைச் சாசனமாய்த்
துப்பிவிடும் உலகமடா
மெய்மை மறைக்க
ஓரடியில் ஒருதுண்டு
கண்கள் திறந்திருந்தாலும்
காசில்லாமல்
காசினியில் காரியம்
முடிவதுண்டோ?
கறுப்புப் பெட்டியில்
கைமாறும் காகிதங்கள்தான்
நீதிக்கு
நியதி எழுதி விடுகின்றன.
இனியென்ன
இயம்ப வேண்டியிருக்கு
நீயும் ஓடு
நிதி நித்திரையின்றி
உனக்காகக் காத்திருக்கிறது
நீதிதான் உறங்கியாயிற்றே.