762
இலங்கையின் பிரபல வர்த்தகரும் செலிங்கோ குழுமத்தின் தலைவருமான லலித் கொத்தலாவல தனது 85ஆவது வயதில் நேற்று (21) காலை காலமானார்.
நாரஹேன்பிட்டியிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த போதே, அவர் காலமானதாக, அவரது குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
செலிங்கோ குழுமத்தின் தலைவரான லலித் கொத்தலாவல, செலான் வங்கியின் ஸ்தாபராகவும் ஆரம்பக்கால தலைவராகவும் இருந்தார். இலங்கையின் மூன்றாவது பிரதமரான சேர் ஜோன் கொத்தலாவலவின் மருமகனான லலித் கொத்தலாவல, கொழும்பு றோயல் கல்லூரியில் கல்வி பயின்றதுடன், பட்டயக் கணக்கியல் கற்கையை ஐக்கிய இராச்சியத்தில் பயின்றமை குறிப்பிடத்தக்கது.