பாராளுமன்றத்தில் வைத்து ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சுஜித் பெரேராவால் தான் தாக்கப்பட்டதாக இராஜாங்க அமைச்சர் டயனா கமகே முன்வைத்த குற்றச்சாட்டுத் தொடர்பாக உடனடியாக விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு உரிய அதிகாரிகளுக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன பணித்துள்ளார்.
ஐ.ம.ச. வின் பாராளுமன்ற உறுப்பினர் சுஜித் பெரேராவால் பாராளுமன்றத்தில் தான் தாக்கப்பட்டதாக இராஜாங்க அமைச்சர் டயனா கமகே சபையில் தெரிவித்ததுடன், இந்த விடயம் தொடர்பாக உடனடியாக விசாரணை செய்ய வேண்டுமென்றும் சபாநாயகரிடம் அவர் கோரிக்கை விடுத்தார். இதனைத் தொடர்ந்து இது தொடர்பாக ஆராய்வதற்காக பிரதமரின் வேண்டுகோளுக்கமைய, சபை நடவடிக்கைகள் 10 நிமிடங்கள் ஒத்திவைக்கப்பட்டதுடன், இது தொடர்பாக அறிக்கை சமர்ப்பிக்குமாறு சபாநாயகர் பணித்துள்ளார்.
இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக மேலும் தெரிவித்த இராஜாங்க அமைச்சர் டயனா கமகே,
“பாராளுமன்ற நூலகத்துக்கு அருகிலுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான பிரத்தியேக மின்தூக்கிக்கு அருகில் என்மீது அத்துமீறல் மேற்கொள்ளப்பட்டது.