மொரட்டுவ பல்கலைக்கழக தொழில்நுட்ப நிறுவகத்தில் தேசிய தொழில்நுட்ப டிப்ளோமா (NDT) கற்கைநெறிக்கான மாணவர் சேர்க்கை தொடர்பான அனைத்துத் தகவல்களும் இன்றைய தினகரன் வாரமஞ்சரி பத்திரிகையுடன் இலவச இணைப்பாக வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு சீர்திருத்தங்கள் அமைச்சின் கீழுள்ள சட்ட ஆணைக்குழு நிர்வாக சேவை பிரிவின் செயலாளர் பதவிக்கான விண்ணப்பப்படிவம் மற்றும் அது தொடர்பான அனைத்து தகவல்களும் இதில் தரப்பட்டுள்ளன. அத்துடன், திருகோணமலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சான்றுப் பொருட்களை ஏல விற்பனை செய்தல் உள்ளிட்ட பல்வேறு கம்பனிகள் தொடர்பான அறிவித்தல்களும் உள்ளடக்ப்பட்டுள்ளன.