732
அடுத்த வருடத்துக்கான (2024) வரவு -செலவுத் திட்டம் எதிர்வரும் நவம்பர் 13ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக, பாராளுமன்றத்தின் தொடர்பாடல் பிரிவு அறிவித்துள்ளது. இந்நிலையில், வரவு -செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு தொடர்பான விவாதம் நவம்பர் 14ஆம் திகதி முதல் 7 நாட்களுக்கு நடைபெறவுள்ளதுடன், அது தொடர்பான வாக்கெடுப்பு எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ளதாகவும், அப்பிரிவு தெரிவித்தது.