புத்தசாசன சமய விவகாரங்கள் மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்துடன் இணைந்து நடத்தும் 2023ஆம் ஆண்டுக்கான தேசிய மீலாத் விழா, முசலி தேசிய பாடசாலையில் இன்று (22) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் நடைபெறும். யுத்தத்தால் பாதிக்கப்பட்டு மிகவும் பின்தங்கிய மன்னார் மாவட்டத்தில் தேசிய மீலாத் விழாவை அடிப்படையாகக் கொண்டு, அடுத்த ஒரு வருடத்தினுள் பல அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன. ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் பல அமைச்சுகள் இந்த வேலைத்திட்டங்களுக்கு நிதி ஒதுக்கவுள்ளதாக, தேசிய மீலாத் விழாவின் 2023ஆம் ஆண்டுக்கான இணைப்பாளரும் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சருமான காதர் மஸ்தான் தெரிவித்தார். இதன் முதற்கட்டமாக இந்த வருடத்தில் உடனடியாக மேற்கொள்ள வேண்டிய அபிவிருத்திகள் மற்றும் வாழ்வாதாரத் தேவைகளுக்காக 187.5 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. வாழ்வாதார அபிவிருத்தி திட்டத்தின் கீழ் மன்னார் மாவட்டத்தில் வறுமைக்கோட்டுக்கு கீழுள்ள மக்களுக்கு தலா 3 ஆடுகள் படி வழங்கப்பட்டதுடன், பயிர்ச் செய்கைக்கான உழுந்து, பயறு ஆகியவை வழங்குவதற்காக 21 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
காதர் மஸ்தானின் முயற்சியின் பலனாக
தேசிய மீலாத் விழா இன்று; மன்னார் நகர் விழாக்கோலம்
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரதம அதிதியாக கலந்துகொள்கிறார்
691
previous post