எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக் துறையில் 4 வருட பிரிட்டிஷ் பட்டப்படிப்பை அதிகாரபூர்வமாக அறிமுகப்படுத்தியது UCL. அதன் மத்திய லங்காஷயர் பல்கலைக்கழகத்தில் இக் கற்கைநெறி ஆரம்பிக்கப்படவுள்ளது. எதிர்காலத்தில் தொழில்துறையின் சவால்களை எதிர்கொள்ளக்கூடிய வல்லுநர்க ளை உருவாக்குவது இதன் நோக்கமாகும்
இக் கற்கைநெறியின் மூலம் உயர்தரப் பரீட்சையில் சித்தியெய்திய மாணவர்களுக்கு 75% வரை புலமைப்பரிசில்களைப் பெறுவதற்கு வாய்ப்பு உண்டு.
பிரதம நிறைவேற்று அதிகாரி கிஹான் சில்வா, கருத்துத்தெரிவிக்கையில். “இலங்கையின் மின்சார மற்றும் இலத்திரனியல் பொறியியல் துறையானது ஏற்றுமதித் துறையில் பங்களிக்கும் முக்கிய துறையாக அடையாளம் காணப்பட்டது, எலெக்ட்ரானிக் இன்ஜினியரிங் துறையானது அந்நிய நேரடி முதலீட்டை ஈர்க்கவும், பெரிய அளவில் உருவாக்கவும் அதிக ஆற்றலைக் கொண்டுள்ளது” என்றார்.