86 ஆவது நுவரெலியா கொல்ஃப் கழக சம்பியன்ஷிப் போட்டிகளுக்கு SLT-MOBITEL, தனது நவீன பரீட்சார்த்த 5G தொழில்நுட்பத்தினூடாக வலுச்சேர்த்திருந்தது. இந்நிகழ்வு அண்மையில் வெற்றிகரமாக நிறைவுற்றது. கொல்ஃப் விளையாட்டு வீரர்களுக்கும் பார்வையாளர்களுக்கும் அசல்நேர விளையாட்டு ஒளிபரப்பினூடாக 5G தொழில்நுட்பம் சிறந்த அனுபவத்தை வழங்கியிருந்தது.
NEGC சம்பியன்ஷிப் கொல்ஃப் போட்டித் தொடர் என்பது, இலங்கையின் கொல்ஃப் விளையாட்டு வீரர்களின் திறமைகளை வெளிப்படுத்தும் பெருமைக்குரிய விளையாட்டு நிகழ்வாக அமைந்துள்ளது. கொல்ஃப் ஆர்வலர்களுக்கு, சிறந்த திறன்கள் மற்றும் விளையாட்டு பண்புகளை கண்டுகளிப்பதற்கான சிறந்த போட்டித் தொடராக இது அமைந்துள்ளது. NEGC சம்பியன்ஷிப் உடன் SLT-MOBITEL கைகோர்த்து, தொழில்நுட்பம் மற்றும் விளையாட்டு ஆகியவற்றுக்கிடையிலான இடைவெளியை சீர் செய்து, 5G தொழில்நுட்பத்தின் வலிமையில் தங்கியிருக்கும் விளையாட்டு ஒளிபரப்பை மேற்கொள்ளும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தருணத்தை ஏற்படுத்தியிருந்தது. நேரலை 5G வலுவூட்டப்பட்ட ஒளிபரப்பை கொல்ஃப் திடலின் ஒவ்வொரு சுவாரஸ்யமான தருணங்களையும் high-definition இல் கண்டு களிப்பதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது. கொல்ஃப் ஆர்வலர்கள் மற்றும் ரசிகர்களின் பார்வை அனுபவத்தை மேம்படுத்துவதாக மாத்திரம் இந்த வழிமுறை அமைந்திராமல், விளையாட்டு ஒளிபரப்பில் எதிர்கால மேம்படுத்தல்களுக்கான திறவுகோலாகவும் அமைந்திருந்தது.