இந்தியாவின் பெங்களூரில் 2023 ஒக்டோபர் 10 அன்று நடைபெற்ற 7வது வருடாந்த தெற்காசிய பயண விருதுகள் (SATA) விழாவில், யாழ்ப்பாணத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ள ஒரு அற்புதமான பாரம்பரிய ஹோட்டலான ஃபாக்ஸ் யாழ்ப்பாணம், தெற்காசியாவின் முன்னணி ஹெரிடேஜ் ஹோட்டல்/ரிசோர்ட்டுக்கான மதிப்புமிக்க விருதைப் பெற்றது.
1908 ஆம் ஆண்டு முதலில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒரு புகழ்பெற்ற குடும்பத்தினதால் கட்டப்பட்ட ஃபாக்ஸ் யாழ்ப்பாணம், அதன் கடந்த காலத்தை நவீன ஆடம்பரத்தின் நேர்த்தியுடன் தடையின்றி ஒருங்கிணைத்துள்ளது, மேலும் பிராந்தியத்தின் வளமான கலாசாரம் மற்றும் பாரம்பரியத்துக்கான ஒரு வாழும் சான்றாக மாறியுள்ளது. கெபிட்டல் மஹாராஜா குழுமத்தினால் நடத்தப்படும் இந்த ரிசோர்ட், யாழ்ப்பாணத்தின் வரலாற்றை உள்ளடக்கி, அதன் பெருமைமிகு நாட்களின் சாட்சியாக விளங்குகின்றது, விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டோர் இக்கட்டடத்தில் பதுங்கு குழிகளை நிறுவிய போர்ச் சகாப்தத்தின் பின்னடைவுகளிலிருந்து அது மீண்டுள்ளது. இலங்கையின் புகழ்பெற்ற ’43 குழுவின் மறுஉருவாக்கம் செய்யப்பட்ட தலைசிறந்த படைப்புகளை காட்சிப்படுத்தும் ஆடம்பர பூட்டிக் ரிசோர்ட், மற்றும் கலைக் கண்காட்சிக்கூடமாகவும் அது மாற்றப்பட்டுள்ளது.
“இந்த மதிப்பிற்குரிய SATA 2023 அங்கீகாரம், ஃபாக்ஸ் ரிசோர்ட்ஸில் உள்ள அனைவரும் பகிர்ந்து கொள்ளும் மிகச் சிறந்த அர்ப்பணிப்புக்குச் சான்றாகும், இது எங்கள் ஹோட்டலை எங்கள் விருந்தினர்களுக்கு இது மறக்க முடியாத அனுபவத்தைத் தருகின்றது.