ஐக்கிய இராச்சியத்தின் ‘Global Brands சஞ்சிகை’, 2023 ஆம் ஆண்டிற்கான இலங்கையின் மிகவும் புதுமையான டிஜிட்டல் வங்கி வர்த்தக நாமமாக, NDB வங்கியை தரவரிசைப்படுத்தியுள்ளது.
மேலும், இலங்கையின் சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான முன்னணி வங்கியாகவும், பெண்களை மேம்படுத்துவதற்கான சிறந்த வங்கியாகவும், NDB வங்கி அடையாளம் காணப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு துறைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் நிறுவனங்களின் செயல்பாடுகளை மதிப்பீடு செய்து விருதுகளை வழங்கும் நோக்கில் ‘Global Brands’ விருது வழங்கும் விழா ஆரம்பிக்கப்பட்டது. நிதி, கல்வி, விருந்தோம்பல், அன்றாட தேவைகள், ஆட்டோமொபைல் மற்றும் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் சிறந்த சேவை வழங்குநர்களை இந்த விருதுகள் அங்கீகரிக்கின்றன.
தனித்துவமான சேவைகளை வழங்கும் நிறுவனங்களை அடையாளம் கண்டு, அவற்றைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு, அத்தகைய நிறுவனங்களுக்கு உலகளாவிய அங்கீகாரத்தைப் பெறவும் இந்த விருதுகள் செயல்படுகின்றன.
NDB வங்கியின் டிஜிட்டல் மாற்றப் பயணத்தின் ஒரு பகுதியாக, NEOS ஆனது பயன்படுத்த எளிமையான வகையில் தொடர்ந்தும் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. இது வாடிக்கையாளர்களின் தனிப்பயனாக்கத்திற்கான தேவையை எளிதான முறையில் பூர்த்தி செய்யவதற்காக டிஜிட்டல் தளங்களை புதுப்பிக்கும் வங்கியின் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது.
NEOS அறிமுகத்திற்குப் பிறகு, NDB வங்கி தனது NEOS ஆன்லைன் வங்கி தளத்தை ஏப்ரல் 2020 இல் அறிமுகப்படுத்தியது. NDB வங்கியின் அனைத்து சேவைகளையும் அணுகக்கூடிய டிஜிட்டல் வங்கித் தளமாக இது இப்போது மாறியுள்ளது.