மத்திய வங்கியினால் பட்டியலிடப்பட்ட பைனான்ஸ் கம்பனியான அசட்லைன் பைனான்ஸ் லிமிடட் நிறுவனம், ‘தேசத்துக்கு சக்தி’ நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் நிதி பற்றிய அறிவு மற்றும் குருநாகல் மாவட்டத்தில் சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாளர்களுக்கு நிலைபேறான எதிர்காலத்தை ஏற்படுத்துவதை சரியாக முகாமைத்துவம் செய்வது தொடர்பில் செயலமர்வொன்றை நடத்தியது. பட்டய கணக்காளர் சமிந்த குமாரசிறியினால் நடத்தப்பட்ட இந்தக் குருநாகல் நிகழ்ச்சியில், 50% க்கும் அதிகமான பெண்களைக் கொண்ட 100க்கும் மேற்பட்ட தொழில்முயற்சியாளர்கள் பங்கேற்றிருந்தனர். பெண் தொழில்முயற்சியாளர்களை ஊக்கப்படுத்துவது மற்றும் பெண்களைப் பலப்படுத்தும் உற்பத்தியில் கவனம் செலுத்தும் ‘லிய திரிய’ நிகழ்ச்சித் திட்டத்தில் அசட்லைன் கொண்டிருக்கும் அர்ப்பணிப்பை ஊக்குவிக்கும் வகையில் இது அமைந்தது. ஊடாட்டம் நிறைந்ததாக அமைந்த இந்த செயலமர்வில் சிறந்த அனுபவம் கொண்ட சில வர்த்தகர்கள் தமது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டதுடன், இது வளர்ந்துவரும் தொழில்முயற்சியாளர்களுக்கு உத்வேகம் அளிப்பதாகவும் காணப்பட்டது.
‘தேசத்துக்கு சக்தி’ என்பது சுற்றுச்சூழல், சமூக மற்றும் ஆட்சி ஆகியவற்றின் வணிக முன்னேற்றத்தில் உள்நாட்டு தொழில்முயற்சியாளர்களின் திறன்களை வளர்ப்பது மற்றும் தற்போதைய பொருளாதார சூழல், புதிய தொழில்நுட்பத்தின் செல்வாக்கு ஆகியவற்றினால் வர்த்தகத் துறையில் காணப்படும் வாய்ப்புக்கள், சவால்களை அடையாளம் காண்பதை நோக்காகக் கொண்டது.
இந்த நிகழ்ச்சித்திட்டம் இதற்கு முன்னர் மாத்தறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் நடத்தப்பட்டது.