மௌத்தை
நினைத்துக்கொண்டு
மறுமைக்காய் பணிசெய்தாய்
இறைபணியில் இணைந்து
ஈமானோடு பணிபுரிந்தாய்.
இன்னல்கள் வந்தபோதும்
இறைவனிடம் ஓப்புவித்து
இன்னல் தீர
வெற்றி கண்டாய்.
நல்லாசானாய் தினம்
நற்பணி செய்து
மாணவர் மனங்களில்
நிறைந்து நின்றார்.
கோபம் இல்லாமல்
கோடூர முகமில்லாமல்
நன்மை தீமையறிந்து
நல்ல பணிசெய்தாய்.
காணும் போதெல்லாம்
சலாம் சொல்லியென்னை
சாச்சா என்றழைப்பாய்
சாச்சியை வந்துபார்ப்பாய்.
உண்மை அன்பால்
உறவுகளை பேணி
அல்-குர்ஆன் வழியில்
ஆலோசனை முன்வைப்பாய்.
உம்மாவின் அருகிலமர்ந்து
உபதேசம் செய்வாய்
உம்மி, நபிவழியில்
உணர்வுபூர்வமாய்
மறுமைபற்றி.
ஊரே ஒன்றுகூடி
உன் நல்லடக்கத்தில்
நிறைந்து நின்றகாட்சி
உன்இறைபணிக்கு சாட்சி.
மண்ணறையில் உனக்கு
மகத்துவமான வாழ்வுமலர
ஐவேளை தெழுகையிலும்
ஆண்டவனிடம்
கேட்கின்றேன்.
மகனே வலீத் முகம்மத்
மறுமையில் உனக்கு
மகத்துவமான வாழ்வு
மலர்ந்து மணம்வீச
அல்லாஹ்விடம்
பிரார்த்திக்கின்றேன்.
(2023-.07-.24 ஆம் திகதி இரவு இறைவனடி சேர்ந்த ஆசிரியர்
எம்.எம்.வலீத் முகம்மதின் மறைவையொட்டி)
இறைபணியில் இணைந்த மகன்
982
previous post