முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதவான் ரி.சரவணராஜாவுக்கு நீதி வழங்குமாறு கோரி அடுத்த வாரம் வடமாகாணத்தில் முன்னெடுக்கப்படவுள்ள ஹர்த்தால் தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடலொன்று யாழ்ப்பாணத்தில் நேற்று முன்தினம் (13) மாலை நடைபெற்றது. பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்கினேஸ்வரன் இல்லத்திலேயே இந்தக் கலந்துரையாடல் நடைபெற்றது. இந்தக் கலந்துரையாடலில் தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்கினேஸ்வரன், தமிழீழ விடுதலைக் கழகத்தின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான த.சித்தார்த்தன், ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவர் ஸ்ரீகாந்தா, செயலாளர் சிவாஜிலிங்கம், ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைவர் வேந்தன் ஆகியோர் பங்குபற்றினர்.
930
previous post