772
பொலிஸ் மாஅதிபர் சீ.டி.விக்கிரமரத்னவின் பதவிக்காலம் மேலும் மூன்று வாரங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் பொலிஸ் மாஅதிபரின் பதவிக்காலம் நீடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்தது.
பொலிஸ் மாஅதிபர் சீ.டி.விக்கிரமரத்னவுக்கு வழங்கப்பட்டிருந்த இரண்டாவது பதவிக்கால நீடிப்பு, கடந்த 9ஆம் திகதியுடன் நிறைவடைந்ததை அடுத்து அவரது பதவிக்காலம் மேலும் 3 வாரங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.